கும்பகோணத்தைச் சேர்ந்த ந.வசந்தகுமார், ஓவியக்கல்லூரியில் படித்தவர். விகடனில் மாணவப் புகைப்படக்கலைஞராக ஜொலித்தவர். காமிரா என் இரண்டாவது வாய், மூன்றாவது கண் என்று சொல்லும் இந்த இளைஞருக்கு கிராமத்து வாழ்வியலைப் பதிவு செய்யவேண்டுமென ஆர்வம். ‘‘என் புகைப்படங்களில் மாயாஜாலங்கள் நிகழாது. கலாசாரம், வாழ்வியல், பண்பாடு, உண்மை, எதார்த்தம் ஆகியற்றைக் காணமுடியும்'' என்கிறார் வசந்தகுமார். அவரது புகைப்படப் பதிவுகளில் சிலவற்றை இங்கே காணலாம்.
அக்டோபர், 2016.